
சென்னை தண்டையார்பேட்டையில், ரூ.18 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ரிட்சி. இவர், துணிகளை மொத்தமாக வாங்கி, கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணுடன் தொழில் ரீதியான நட்பு ஏற்பட்டுள்ளது. சங்கீதா, தானும் தொழில் ஈடுபடுவதாக கூறி மைக்கேலிடம் ரூ.18 லட்சம் வரை பணம் வாங்கி, திருப்பி தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.
இதுகுறித்து, தண்டையார்பேட்டை போலீசில் மைக்கேல் புகார் செய்தார். புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, சங்கீதா பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார், அவர் மீது பண மோசடி தொடர்பாக வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.