
வைகை ஆற்றில் அதிகமான நீர் செல்வதால் பொதுமக்களின் நலன் கருதி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ கா ப விளக்குத்தூண் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு மதி லோகேஸ்வரி அவர்களுக்கு வைகை ஆற்றை சுற்றிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கும்படி உத்தரவிட்டார் அவர்கள் உத்தரவுப்படி இன்று காவல் ஆய்வாளர் அறிவிப்பு பலகைகள் வைத்தார் மேலும் வைகை ஆற்றில் யாரும் இறங்காமல் இருக்க ரோந்து காவலர்களும் சுழற்சி சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர் மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது