
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் போலீசார் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கின் தீர்ப்பானது மிக விரைவிலேயே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச போலீசாருக்கு அம்மாநில காவல்துறை தலைமையகத்திலிருந்து சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், மிலாடி நபி, குருநானக் ஜெயந்தி, அயோத்தி தீர்ப்பு உள்ளிட்டவற்றை கருத்தில்கொண்டு, நவம்பர் 1 முதல் போலீசார் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
தவிர்க்க முடியாத விடுப்பு ஏதேனும் எடுப்பதாக இருந்தால் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.