விருதுநகர் மாவட்டம்:-
கொரோனா ஊரடங்கில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த வாகனங்களை எச்சரித்து அனுப்பபட்டது.
அருப்புக்கோட்டை நகரில் அநாவசியமாக அங்கும் இங்குமாக இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அதை தடுத்துநிறுத்திய சிறப்பு சார்பு ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் காவலர்கள் சிலர் தனித்தனியாக நின்று சாலையில் இரு ச்சக்கரவாகனத்தை ஒவ்வொன்றாக நிறுத்தி சோதனை செய்தார் இந்த சோதனையானது அருப்புக்கோட்டை நான்கு சாலைகள் சந்திக்குமிடமான எம்.எஸ்.கார்னர் பகுதியில் நடைபெற்றது.
ஒருசில இருசக்கர வாகன ஓட்டிகள் ஊரைசுற்றுவதும் போவதுமாக இருப்பதனால் காவல் துறையினரை கண்டதும் ஓடி மறைந்து கொள்கின்றனர்.
இம்மாதிரியாக பயம் இன்றி அலைந்து திரியும் நபர்களை கண்டறிந்து சோதனை செய்து வாகனம் காவல்நிலையம் கொண்டு செல்லப்படுகின்றது.