தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீவாரி யமஹா நிறுவனம் சார்பாக கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடியில் வசிக்கும் 50 ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு பொட்டலங்களை தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்
தூத்துக்குடி பழைய முனிசிபல் அலுவலகம் முன்பு கொரோனா கால ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை & தொலைக்காட்சி கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீவாரி யமஹா நிறுவனம் சார்பாக 50 பேருக்கு மதிய உணவு பொட்டலங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயகுமார் அவர்கள் உணவுப் பொட்டலங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட பத்திரிகை &தொலைக்காட்சி கூட்டமைப்பு தலைவர் திரு. பிரான்சிஸ், செயலாளர் திரு. மார்க்மகேஷ், இணைச் செயலாளர் திரு. அண்ணாதுரை, திரு. ராஜா, திரு.மணைவை ரூஸ்வெல்ட், திரு. கனேஷன், திரு. முத்துக்குமார், திரு. சுபாஷ், திரு. நெய்தல்அண்டோ, திரு. சொக்கலிங்கம், திரு. பாரத், மற்றும் லூயிஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி துணை கண்காணிப்பாளர் திரு. கனேஷ், மத்திய பகம் காவல் ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், தனிபிரிவு தலைமை காவலர் திரு. சுப்பிரமணியன், உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.