|சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனக்கு 4 லட்ச ரூபாய் மதிப்பிலான நிலத்தை வாங்கி தருவதாக கூறி குணசேகரன் என்ற நபர் ஏமாற்றி விட்டதாக கூறி பூக்கடை காவல் நிலையத்தில் ராஜேஷ் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தலைமை செயலகம் அருகே கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தபோது சந்தேகத்திற்கிடமாக தமிழ்நாடு அரசு என பெயர் அச்சிடப்பட்டு வந்த ஒரு காரை போலீசார் மடக்கி சோதனை செய்த சோதனையில் காரின் பதிவு எண் மாற்றப்பட்டு மோசடியில் ஈடுப்பட்டது தெரியவர அந்த காரில் வந்த ஒரு நபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பது தெரியவந்தது இவர் கார் ஓட்டுனராக பணிப்புரிந்து வந்துள்ளார். மேலும் இவரது மனைவி தலைமை செயலகத்தில் பதிவு எழுத்தாளராக உள்ளதும், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதும் விசாரணையில் தெரிய வர பின்னர் இவரது மனைவியின் பெயரில் கார் வாங்கி பதிவு எண்களை மாற்றி பல பேரிடம் நில மோசடியில் ஈடுப்பட்டு வந்ததும் அம்பலமாகியுள்ளது. வியாசார்பாடியில் உள்ள இவரது மனைவி புஷ்பலதா என்பவரை கைது செய்து கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்…