சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்ததால் புகாரின் அடிப்படையில் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து இரண்டு ரயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர். அப்போது பேசின் பாலம் ரயில் நிலைய வடகோடியில் சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த கன்னிகாப்புரத்தை என்று சேர்ந்த ஆகாஷ் (21), என்பவரை ரயில்வே போலீசார் கைது. இவரிடம் நடத்திய விசாரணையில் பேசின் பாலம் ரயில் நிலையம் மார்க்கமாக ரயிலில் பயணிக்கும் நபர்களிடம் வழிப்பறி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் மேலும் விசாரணையில் இவரது கூட்டாளிகள் வினோத் (21), மற்றும் செல்வம் (21) ஆகியோர் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது தெரியவர அவர்களையும் கைது செய்த ரயில்வே போலீசார் 7அரை சவரன் நகையையும், 8 செல் போன்களையும் பறிமுதல் செய்து மூவரையும் புழல் சிறையில் அடைத்தனர்..
Related Articles
பள்ளிக் கூடங்களா? அடிமை கூடாரங்களா?மத்திய தகவல் ஆணையம் கொடுத்த சவுக்கடி
பள்ளிக் கூடங்களா? அடிமை கூடாரங்களா?மத்திய தகவல் ஆணையம் கொடுத்த சவுக்கடி Ref. Central Information Commission: Bharmanand misra.vs kendiriya vidyalaya.Sangadan 2016.decided on 22.07.2016. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அந்த குழந்தைகளை பள்ளிகூடங்களில் பொதி சுமக்கும் அடிமைகளாக மனரீதியாக உடல் ரீதியாக பாதிப்படைய செய்கிறார்கள் வெளி நாடுகளில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்க்கு முன் முதல் நாளிலிருந்தே அவர்களின் நாக்கில் தேன் தடவி அனுப்புவார்கள்.அந்நாட்டு குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்வது ஒரு இனிப்பான அனுபவமாக.அடிமனதில் பதிந்து விடும். […]
போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் ஐடியா
போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் ஐடியா மதுரை நகரில்போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக கட்டப்பட்ட குருவிக்காரன் சாலை உயர்மட்ட பாலத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம் என போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: குருவிக்காரன் உயர்மட்ட பாலம் திறக்கப்பட்டு வாகனங்கள் சென்று, வரும் நிலையில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தலாம்.அழகர்கோவில், புதுார், மாட்டுத்தாவணி, மேலுார் ரோட்டில் இருந்து அவனியாபுரம், மீனாட்சி அம்மன் கோயில், பெரியார் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் […]
பொன்விழா ஆண்டை முன்னிட்டு மகளிர் போலீசாரின் பாய்மரப்படகு பயணம்
பொன்விழா ஆண்டை முன்னிட்டு மகளிர் போலீசாரின் பாய்மரப்படகு பயணம் மகளிர் போலீஸ் துறையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சென்னையிலிருந்து கோடியக்கரை வரை மகளிர் போலீசாரின் பாய்மர படகு பயணம் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. தமிழ்நாடு போலீஸ் துறையில் புதிய வரலாறு படைக்கும் படகு பயணத்தை இந்த குழுவினர் மேற்கொண்டு உள்ளனர். இது மகளிர் போலீசாரால் மேற்கொள்ளப்படும் மிக நீண்ட படகு பயணமாக உள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் நீலாதேவி தலைமையில் 25 பேர் கொண்ட போலீசார் பாய்மர படகில் […]