Police Department News

சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு பதிவு. வாகனம் பறிமுதல்.

சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு பதிவு. வாகனம் பறிமுதல்.

பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு.மோகன் குமார் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பழவூர் சாஸ்தா கோயில் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள், போலீஸாரை கண்டதும் வண்டியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். மேற்படி மணல் திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், ஆவரைகுளம் பகுதியை சேர்ந்த பிரபு வயது 35 , மனுவேல் ராஜ் வயது 68 , என்பது தெரியவந்தது. பின் இருவர் மீதும் உதவி ஆய்வாளர் திரு. மோகன்குமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து எதிரியை தேடி வருகின்றனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய Hitachi வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.