சட்டவிரோதமாக மண் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளாங்குளி பகுதியில் 18.06.2021 அன்று உதவி ஆய்வாளர் திரு. ராஜாமணி அவர்கள் மற்றும் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, வெள்ளாங்குளி பகுதியில் சட்டவிரோதமாக மண்ணை அள்ளிய வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த அய்யம்பெருமாள் வயது 37, முத்துப்பாண்டி வயது 35, மற்றும் ஒரு நபர் மீது வீரவநல்லூர் காவல் நிலையத்தில் u/s 379 IPC (sand theft)பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் 2 யூனிட் மண் மற்றும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய 1 JCB வாகனம் , 2 டிராக்டர்களை, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.