ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டி பகுதியில் அனுமதியின்றி மண் அள்ளிய வாகனம் பறிமுதல், ஒட்டன்சத்திரம் போலீசார் நடவடிக்கை
ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டி ரோட்டில் வெள்ளியன்வலசு கிராமம் உள்ளது. இங்குள்ள ரோட்டில் சிலர் அனுமதியின்றி மண் அள்ளினர். மேலும் வெரியப்பூர் ஊராட்சியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் குடி நீர் குழாயையும் உடைத்தனர். இதனையறிந்த கிராமத்தினர் ஊராட்சித் தலைவர் பெரியசாமி தலைமையில் அந்த வாகனங்களை சிறைபிடித்தனர். ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. வெங்கடாஜலபதி அவர்கள் வழக்குப்பதிவு செய்து ஒரு டிப்பர் லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தார்.