
தென்மாவட்டங்களில் ரவுடிகள், சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரிக்கை
தென்மண்டல .ஐ.ஜி. அஸ்ரா கார்க் கூறியதாவது
நெல்லை மாவட்டத்தில் 44 பேரும், தென்காசி மாவட்டத்தி் 33 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 65 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 27 பேரும் ஆக மொத்தம் 169 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்
இதுவரை நெல்லை மாவட்டத்தில் 603 ரவுடிகள், தென்காசி மாவட்டத்தில் 299 ரவுடிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் 800 ரவுடிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 554 ரவுடிகள் ஆக மொத்தம் நெல்லை சரகத்தில் 2256 ரவுடிகள் மீது நிர்வாகதுறை நடுவர் அவர்கள் மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற ரவுடி மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்
