குற்றவாளியை மறைக்க சாட்சியத்தை மறைத்தல் அல்லது பொய் தகவல் கொடுத்தல்.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 201 (IPC Section 201)
ஒரு குற்றம் நடைபெற்றதை அறிகிறோம் அல்லது அதனைப்பற்றி அறியும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அந்த நிலையில் அந்தக் குற்றம் பற்றிய சாட்சியத்தை குற்றவாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மறைப்பது குற்றமாகும். அந்த நோக்கத்துடன் நடைபெற்ற குற்றத்தை பற்றிய பொய்யான தகவலைத் தருவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றம் நடைபெற்றிருந்தால், அப்படிச் செய்தவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைக்காவல் விதிக்கப்பட்ட குற்றம் நடைபெற்றிருந்தால் 3 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
10 ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெறத்தக்க குற்றம் நடை பெற்றிருந்தால் அந்தக் குற்றத்திற்கு விதிக்கத்தக்க தண்டனையில் நான்கில் ஒரு பங்கைச் சிறைக்காவலாகவும் அல்லது அபாரதமாகவும் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். குற்றம் புரிந்தவரைத் தப்பிக்க வைக்க குற்றத்தின் சாட்சியத்தை காணாமல்போகச் செய்தல் அல்லது பொய்யான தகவலை அளித்தல்எவரேனும், ஒரு குற்றம் புரியப்பட்டிருக்கிறது என்று தெரிந்தே அல்லது அவ்வாறு நம்புவதற்குக் காரணமிருக்கும்போது, சட்டபூர்வ தணடனையிலிருந்து குற்றம் புரிந்தவரைத் தப்பிக்க வைப்பதற்காக, அக்குற்றம் புரியப்பட்டிருப்பதான ஏதாவதொரு சான்றாதாரத்தை உள்நோக்கத்துடன் காணாமல் போகச் செய்தால் அல்லது அந்த உள்நோக்கத்துடன் அக்குற்றம் பொருட்டான ஏதாவதொரு தகவலை, பொய்யானது என தெரிந்தோ அல்லது நம்பியோ அளித்தால்;
ஒரு மரண தண்டனைக்குரிய குற்றமாக இருப்பின்:-
குற்றம் புரியப்பட்டிருப்பதாக அவருக்குத் தெரிந்த அல்லது நம்புகிற அக்குற்றம், மரண தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருப்பின், ஏழு வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும், மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருப்பின்:-
மற்றும் அக்குற்றமானது, ஆயுள் சிறைத் தண்டனையுடன் அல்லது பத்து வருடங்கள் வரை நீடிக்கப்படக்கூடிய சிறைத் தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருப்பின், மூன்று வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அபராதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
பத்து வருடங்களுக்குக் குறைவான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருப்பின்:-
மற்றும் அக்குற்றமானது பத்து வருடங்களுக்கு நீடிக்கப்பட முடியாத ஏதாவதொரு கால அளவிலான சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்படக்கூடியதாக இருப்பின், அக்குற்றத்திற்கென்று நிர்ணயிக்கப்பட்ட நீண்ட கால அளவு சிறைத்தண்டனையில் நான்கில் ஒரு பங்கு கால அளவு வரை நீட்டிக்கப்படக்கூடிய, அக்குற்றத்திற்கென வரையறுக்கப்பட்ட ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.
எடுத்துக்காட்டு
A என்பவர், z என்பவரை B என்பவர் கொலை செய்துவிட்டார் என்று தெரிந்திருந்தும், B ஐ தண்டனையிலிருந்து தப்ப வைக்க, z இன் சடலத்தை மறைக்க, B க்கு உதவுகிறார்.ஏதாவதொரு வகையிலான ஏழு வருடங்களுக்கான சிறைத்தண்டனைக்கும் மற்றும் அபராதத்திற்கும் A உள்ளாக வேண்டும்.