பொதுமக்களிடம் அன்பாக நடக்க போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை
பொதுமக்களிடம் அன்பாகவும் நல் உறவாகவும் நடக்க வேண்டுமென போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா அவர்கள் அறிவுரை வழங்கினார்,
திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா திண்டுக்கல்லில் உள்ள காவல்நிலையங்களை ஆய்வு செய்தார் அங்கிருந்த காவல் அதிகாரிகளும் காவல் துறையினரும் பொதுமக்களிடம் கண்ணியமிக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும் பொது மக்களிடம் அன்பாகவும் நல்லுறவாகவும் பழக வேண்டும் என்பது குறித்தும் அறிவுரைகளை எடுத்து கூறினார். அப்போது அவர் கூறியதாவது, எவ்வளவு நேரம் வேலை பார்கிறோம் என்பது முக்கியமில்லை எப்படி வேலை பார்கிறோம் என்பதுதான் முக்கியம். பொது மக்கள் தங்களின் பிரச்சனைகளை தீர்பதற்குதான் நம்மிடம் வருகிறார்கள்.
நாம் பிரச்சனைகளை உருவாக்க கூடாது, பொதுமக்களிடம் அன்பாகவும் நல் உறவு வைத்து கொள்ள வேண்டுமென அவர் கூறினார்.
