மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையின் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் 13 வது நாள், அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்வுகள் மூலம் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இந்த தருணத்தில் ஒரு மனித உயிரின் மதிப்பையும், வாகன ஓட்டிகள் தங்களது குடும்பத்தை மனதில் கொண்டு சாலை விதிகளை மதித்தும் நடந்து வருவது மிகவும் நல்ல விசயமாக இருந்த பொதும், இன்னும் ஒரு சிலர் சட்ட விதிகளை மீறியும் அதிவேகத்தில் வாகனங்களைஓட்டி தங்களது உயிருக்கும், மற்றவர்களின் உயிருக்கும் கேடு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டுதான் வருகிறார்கள், அவர்களை திருத்தி நல்வழிபடுத்தும் நோக்கத்தோடு அவர்களின் விதி மீறலுக்கான சட்டப்படியான அபராதத்தையும் காவல் துறையினர் விதித்து வருகின்றனர்
இது பற்றி மதுரை மாநகர், அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ. தங்கமணி அவர்கள் கூறுகையில் கவனக்குறைவாகவும் அதிகமான வேகத்துடனும், எதிரே வருபவரை பயமுறுத்தும் படியும் வாகனத்தை ஓட்டி வருபவர்கள், அவர்களது வாகனம் வரும் வேகத்தை speed analyzing radar gun மூலம் கண்காணித்து குற்றத்திற்கு தகுந்தாற்போல் அபராதமும் விதித்து வருவதாக கூறினார் மேலும், செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது விபத்துக்கள் ஏற்பட வழிவகுக்கும், எனவே இது போன்ற குற்ற செயலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து இது போன்று நடந்து வந்தால் அவர்களது வாகனம் ஓட்டும் உரிமம் தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறினார் இது போன்று பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பது தங்களுக்கு வருத்தமாகவே உள்ளதென்றும், வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில்தான் இவ்வாறு கனத்த இதயத்துடன் அபராதங்களை விதித்து வருவதாகவும் கூறினார்