பிளாஸ்டிக் பையில் சாராயம் விற்ற குருவரெட்டியூர் வாலிபர் கைது, அம்மாபேட்டை போலீசாரின் அதிரடி நடவடிக்கை
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டை குருவரெட்டியூர் வாரச்சந்தை ரோட்டில் அம்மாபேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் வெள்ளை பிளாஸ்டிக் சாக்கு பை வைத்து கொண்டு வந்துள்ளார், அதை சோதனை செய்ததில் சாக்கு பைக்குள் பிளாஸ்டிக் கவரில் அரசால் தடை செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகள் 6 இருந்தன. சாராயம் விற்பனைக்கு கொண்டு வந்த குற்றத்திற்காக குருவரெட்டியூர், எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வசிக்கும் செம்பான் மகன் பெருமாள் வயது 35, என்பவர் கைது செய்யப்பட்டார், சாராய பாக்கெட்டுகள் 6 ம் பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
