Police Recruitment

கடனை திருப்பி கேட்டவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

கடனை திருப்பி கேட்டவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள பருவதனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மகன் அஸ்வின் (வயது20). இவர் வீடுகளில் கபோடுகள் தயாரிக்கும் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் இவரது நண்பர் சோகத்தூர் அடுத்துள்ள மேட்டுதெருவை சேர்ந்த திருப்பதி மகன் சந்துரு (21). கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்துரு, அஸ்வினிடம் ரூ.10 ஆயிரம் பணம் கடனாக வாங்கியுள்ளார். பின்னர் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 12-ந் அன்று சந்துரு வாங்கிய பணத்தை கொடுக்கிறேன். அதனால் நீ பென்னாகரம் மெயின்ரோடு அருகில் உள்ள சிறுபிள்ளை கிராமத்திற்கு செல்லும் வழி சாலைக்கு வா என்று அஸ்வினிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பி அவர் அங்கு வந்தார். அப்போது பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்துரு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஸ்வின் வயிறு மற்றும் உடலில் பல இடங்களில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அஸ்வினை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து சந்துருவை நேற்று கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.