மதுரை, செல்லூரில் தன் வீட்டில் குடியிருந்தவரிடம் நகை திருடிய வீட்டின் உரிமையாளர்
மதுரை டவுன், செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் அஹிம்சாபுரம் 4 வது தெரு, புதிய விசாலத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவசாமி மனைவி முத்துலெட்சுமி வயது 24/21, இவர் தன் கணவர், தன் மாமா மாயி, அத்தை சுமதி ஆகியோருடன் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறார், இவருக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகின்றன, இவருக்கு திருமணத்தின் போது சீதனமாக 7பவுன் தங்க செயின், 3 பவுன் தங்க நெக்லஸ், மற்றும் ஒன்னரை பவுன் தங்க தோடு, அரைப் பவுன் மாட்டல் போட்டுள்ளனர்.இவரின் கணவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் தன் வீட்டை பராமரித்து வருகிறார், இவரது மாமா மாயி அவர்கள் மாட்டுத்தாவணியில் பழக்கடையில் லோடு மேனாக வேலை செய்து வருகிறார். இவரின் அத்தை வீட்டின் அருகில் உள்ள துண்டுக் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 23 ம் தேதி கணவரின் உறவினரின் வீட்டு திருமணத்திற்கு தன் நகைகளை அணிந்து கொண்டு நிகழ்சியில் கலந்து கொண்டு அதன் பின் மதியம் 12. 30 மணியளவில் வீட்டிற்கு வந்து நகைகளை கழட்டி தன்னுடைய பீரோவில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டாமல் அடைத்து வைத்துள்ளார் அதன்பின் கடந்த 25 ம் தேதி மதியம் சுமார் 3 மணியளவில் பிரோவில் துணிகளை மடித்து அடிக்கி வைத்து விட்டு லாக்கரில் இருந்த நகைப் பெட்டியை திறந்து பார்த்த போது தங்க தோடும் மாட்டல் மட்டும் இருந்தது கண்டு திடுக்கிட்டார். 7 பவுன் செயின், 3 பவுன் நெக்லஸ் காணவில்லை, உடனே தன் கணவர், மாமனார், மாமியார் ஆகியோருக்கு தகவல் கொடுத்து அவர்களும் வந்து தேடிப்பார்த்து நகை கிடைக்கவில்லை அக்கம் பக்கத்தில் விசாரித்த போது , கடந்த 24 ம் தேதி வீட்டின் உரிமையாளர் சுந்தரி வீட்டிற்குள் போய் ஏதோ எடுத்துக்கொண்டு சேலையில் மறைத்து கொண்டு சென்றதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர் தன் கணவர் மற்றும் மாமியார், மாமனார் ஆகியோருடன் செல்லூர் காவல் நிலையம் வந்து தங்களது நகைகளை திருடியவர்களை கண்டுபிடித்து அவைகளை மீட்டுத்தரும்படி புகார் அளித்துள்ளார்
புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. வேதவள்ளி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ஆண்டவன் அவர்கள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர் விசாரணையில் நகைகளை திருடியது வீட்டின் உரிமையாளர் சுந்தரிதான் என தெரியவந்தது. உடனே அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர், நகைகளை மீட்டு, நகையின் உரிமையாளரான புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.