
பொண்ணு செய்யுற வேலையா மா இது? போலீசாரையே வியக்க வைத்த பெண்..!!
ஒரு பொண்ணு செய்யுற வேலையா மா இது? போலீசாரையே வியக்க வைத்த பெண்..!!
நாகூரில் பெண் ஒருவர் செய்த காரியம் போலீசாரையே திகைக்க வைத்துள்ளது.
தற்போது உள்ள காலகட்டத்தில் ஆண் செய்யும் அட்டுழியங்களை தாண்டி, நாங்கள் ஆண்களை விட குறைந்தவர்கள் இல்லை என்று பெண்கள் செய்யும் அட்டுழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் நாகூரில் நடந்துள்ளது. ஆம், மேல வாஞ்சூர் சோதனை சாவடியில் பாஸ்கரன் என்ற நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் பொது, சந்தேகப்படும் விதமாக பெண் ஒருவர் அந்த வழியாக சென்றதை அடுத்து, அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அவரது பையை சோதனை செய்ததில் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அவர் வைத்திருந்த பையில், புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது. இதை தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், 27 வயதான நாகை வெளிப்பாளையம் தாமரைகுளத்தை சேர்ந்த ஜெயசந்திரனின் மனைவி மாரீஸ்வரி என்பதும், இவர் காரைக்கால் பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரீஸ்வரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.