
காவலர்களின் பிள்ளைகளுக்கு.. அரசு மற்றும் தனியாரில் வேலைவாய்ப்பு.. உருவாக்கப்பட புது பிரிவு
காவல் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காக காவல்துறை தலைமையகம் சார்பாக புதிய பிரிவு தொடங்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக காவல்துறை நலப்பிரிவு செயல்பட்டு வருகிறது. காவலர்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் டிஜிபி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இந்த பிரிவு இயங்கி வருகிறது.
காவல்துறையினரின் குழந்தைகளுக்கான வேலைவாய்ப்பு பரிமாற்றம்’ என்ற பெயரில் இந்த பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இது முழுக்க முழுக்க காவல்துறையில் வேலை பார்க்கும் நபர்களின் குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதில் உதவும் பிரிவு ஆகும். அரசு மற்றும் தனியாரின் இவர்களுக்கு வேலை வாய்ப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கவும், வேலை தேடுதலில் இவர்களுக்கு வழிகாட்டவும், தகவல் பரிமாறவும் இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளன
எங்கெங்கே வேலை வாய்ப்பு உள்ளது, எங்கெங்கே விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்த விவரங்களை காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு இந்த அமைப்பு வழங்கும். காவல்துறையினரின் வாரிசுகள் பயன்பெறும் வகையில் இந்த நலத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு மூலம் பயன் பெற விரும்பும் காவல்துறையினர் தங்களின் விவரங்கள் மற்றும் தங்களின் குழந்தைகளின் விவரங்களின் தெரிவிக்க வேண்டும்.
