
பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து பயிற்சி முகாம்
மதுரையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்களை தடுப்பதற்கு மற்றும் அவர்களுக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்குவதற்கு மற்ற அரசு துறைகள் ஒருங்கிணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கு மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் இன்று ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாம் மற்றும் மகளீர் உதவி மையம் துவக்கவிழாவில் சீமா அகர்வால் காவல்துறை கூடுதல் இயக்குனர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அவர்கள் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினார்.மேலும் இப்பயிற்சி முகாமில் மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் காமினி அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகள் மற்றும் காவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
