
நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு
நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் IPS கள்ளக்குறிச்சி முதல் சங்கராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி அந்த இடங்களை நேரில் ஆய்வு செய்தார். பின்பு அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் விபத்து எச்சரிக்கை பலகை வைக்க உத்தரவிட்டார்.
பின்பு சங்கராபுரம் காவல் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களான வழக்குநாட்குறிப்பு கோர்ட்டு ஆவணம், மனுபதிவேடு, உள்ளிட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிபுறம் தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுரை வழங்கினார் இந்த ஆய்வின் போது, திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கெங்காதரன் அவர்கள் மற்றும் சங்கராபுரம் காவல் நிலைய காவலர்கள் உடனிருந்தனர்.
