
மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறி செய்த ரவுடி கைது, ஜெய்ஹிந்துபுரம் போலீசாரின் அதிரடி
மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம், சோலைஅழகுபுரத்தை சேர்ந்த சந்தானம் மகன் சுரேஷ் வயது 34/21, இவர் நேற்று மதியம் 1.45 மணியளவில் ஜெய்ஹிந்துபுரம் சோலைஅழகுபுரம் 1 வது மெயின் சந்திப்பில் முருகன் இட்லி கடை அருகே நின்று கொண்டிருந்த போது ஒரு ரவுடி கத்தியை காட்டி மிரட்டி அவர் கையிலிருந்த ரூபாய் 470 ஐ பறித்துக் கொண்டு ஓடி விட்டான், உடனே அவர் மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரை தொடர்ந்து காவல்நிலைய ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்களின் உத்தரவின் பேரில் மேற்படி எதிரியை கைது செய்து விசாரித்த போது அவன் ராமநாதபுரத்தை சேர்ந்த முத்தையா என தெரிய வந்தது. உடனே அவன் சார்பு ஆய்வாளர் திரு. திலீபன் அவர்கள் வழக்கு பதிவு செய்து, ஆய்வாளர் திரு. கதீர்வேல் அவர்கள் விசாரணை நடத்தி அவனை நீதி மன்றத்தி்ல் ஆஜர்படுத்தி, நீதி மன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
