மதுரை, திருப்பாலை பகுதியில் நான்கு சக்கர வாகனம் திருட்டு திருப்பாலை போலீசார் தேடி வருகின்றனர்
மதுரை மாநகர் திருப்பாலை D4, காவல் நிலைய எல்லைக்குடபட்ட பகுதியான திருப்பாலை இந்திரா சாலை பெரியசாமி கோனார் காம்பவுண்டில் வசித்து வருபவர் லக்ஷிமணன் மகன் ராமகிருஷணன் வயது 42/21, இவர் திருப்பாலை TWAD காலனி 1 வது தெருவில் ஶ்ரீ காளியம்மன் ஆட்டோ மொபைல்ஸ் என்ற பெயரில் சர்விஸ் சென்டர் நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 4 ம் தேதி காதர் என்ற தரகர் மூலம் நான்கு சக்கர வாகனம் ஒன்றை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சாமுவேல்,சங்கர் மற்றும் சதீஸ் ஆகியோரிடமிருந்து ரூ. 7,20,000 க்கு விலைக்கு வாங்கியுள்ளார் அந்த காரை இவர் கடந்த 11 ம் தேதி இரவு தன் வீட்டின் முன் நிறுத்தி விட்டு மறுநாள் காலையில் பார்த்தபோது கார் கானவில்லை உடனே திருப்பாலை D4, காவல்நிலையத்தில் காரை கண்டுபிடித்து கொடுக்கும்படி புகார் மனு அளித்தார், மனுவை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. எஸ்தர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. பாண்டியராஜன் அவர்கள் வழக்கு பதிவு செய்து திருட்டுப்போன காரை தேடி வருகின்றனர்.
