
புறக்காவல் நிலையம்: ஆட்சியர், எஸ்.பி. திறப்பு
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் மற்றும் கண்காணிப்பு கோபுரத்தை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
தூத்துக்குடி, கடற்கரை சாலை தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க விசைப் படகு உரிமையளர் சங்கம் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகளின் பலநாட்களாக கோரிக்கை வைத்ததையடுத்து இன்று (15.7.21) புறக்காவல் நிலையம் மற்றும் கண்காணிப்பு கோபுரத்தை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வின் போது டவுன் டி.எஸ்.பி. கணேஷ், மீன்துறை இணை இயக்குநர் அமல் சேவியர், மீன்துறை உதவி இயக்குநர்கள் விஜயராகவன், அன்றோ பிரின்சி வயலா, அனைத்து விசை படகு உரிமையாளர் சங்க தலைவர் சேவியர் வாஸ், தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், உதவி ஆய்வாளர்கள் சிவகுமார், முத்து கணேஷ், உதயலட்சுமி உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.
