கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு… தமிழகத்தில் முடிவுக்கு வந்த ஊரடங்கு..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஊரடங்கு குறித்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
3வது அலையின் தொடக்கத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஆனால் பல மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று வெகுவாகக் குறைந்துள்ள வருவதால் 19-ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதன் பிறகு தமிழகத்தில் மேலும் சில முக்கிய தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிகிறது.
அதிலும் குறிப்பாக, ஆன்லைன் கிளாஸிலே ஓடி கொண்டிருக்கும் பள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதே போல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், பார்கள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
