
மதுரை K.புதூர் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவரின் உடலை காவல்துறையினருக்கு தெரியாமல் எரித்த அண்ணன், திருப்பாலை போலீசார் விசாரணை
:மதுரை, K.புதூர், சூர்யா நகர் பகுதி, சுபாஷினிநகரில் வசித்து வருபவர்
பழனிச்சாமி மகன் மணி வயது 24/21,
இவர் கடந்த 11 ம் தேதி, தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை காவல்துறைக்கு தெரியப்படுத்தாமல் அவருடைய அண்ணன் சுரேஷ் என்பவர் இறந்தவரின் உடலை அவரது சொந்த ஊரான மாங்குளம் கிராமத்திற்கு எடுத்து சென்று, அங்கு எரியூட்டி அடக்கம் செய்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த மதுரை வடக்கு வட்டம் ஆத்திகுளம் பகுதி கிராமநிர்வாக அதிகாரி திருமதி. அபிராமி அவர்கள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும்படி மதுரை, திருப்பாலை D4, காவல்நிலையத்திற்கு புகார் மனு அளித்துள்ளார், புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் திருமதி. எஸ்தர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.சண்முகநாதன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
