அரசு அனுமதியின்றி மது, மற்றும் மது பிரியர்களுக்கு மது அருந்த டம்ளர், திண்பணடங்கள் வழங்கிய பெட்டிக்கடைக்காரர் கைது, திருநகர் போலீசாரின் நடவடிக்கை
மதுரை, திருநகர் W1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ராஜ்குமார் அவர்கள் 18 ம் தேதியன்று ஆய்வாளர் திருமதி அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி சரக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தனக்கன்குளம், பர்மா காலனி விளக்கு கலை நகர் பகுதியில் அம்மாசி மகன் ஜெயக்குமார் வயது 39/21, என்பவர் சட்டவிரோதமாக மது அருந்துவோருக்கு மது அருந்த டம்ளர் மற்றும் திண்பண்டங்கள் விற்பனை செய்து வந்தார் அவரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து சட்டவிரோதமாக விற்பனைக்கு வைத்திருந்த 8 மதுப் பாட்டில்கள் கைபற்றப்பட்டு நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
