தண்ணீரில் தத்தளித்த மாணவரை மீட்ட தீயணைப்பு துறையினர்
மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த கரன்ராஜ் வயது 21 கல்லூரி மாணவரான இவர் நேற்று (24.07.21) நள்ளிரவு 1 மணி அளவில் மதுரை தெப்பக்குளத்தின் கரையில் இருந்து மைய மண்டபத்திற்கு நீச்சல் அடித்து செல்வதாக நண்பர்களுடன் பந்தயம் கட்டி நீந்தி சென்ற நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு மீண்டும் கரைக்கு வர முடியாமல் மைய மண்டபத்தில் சிக்கி தவித்தார். உடன் வந்த நண்பர்கள் அருகில் உள்ள தெப்பக்குளம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் உடனடியாக அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு படகுடன் விரைந்து வந்த நிலைய அலுவலர் கண்ணன் மற்றும் அனுப்பானடி நிலைய ஜெயக்குமார் , முருகன் ,தீபக ஜீவன் ,சின்னகருப்பு ,ஸ்டாலின், கருப்பையா அடங்கிய குழுவினர்… படகில் சென்று பலத்த காற்றுக்கிடையில் அந்த மாணவரை பத்திரமாக மீட்டனர். மாணவர்கள் வாழ்க்கையில் எதிர் நீச்சல் அடிக்க வேண்டுமே தவிர இது போன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபட கூடாது.
