அருப்புக்கோட்டை , கலைஞர் நகரில் தீப்பற்றி எரிந்தது, போராடி அணைத்த தீயணைப்பு படையினர்
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, கலைஞர் நகரில் பயன்பாடு இல்லாத கைவிடப்பட்ட பழைய கட்டிடத்தில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்தனர்
அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம், பொருட் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
அருப்புக்கோட்டை, கலைஞர் நகரின் மையப்பகுதியில் நேற்று மாலை திறந்த வெளியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளில் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர். அந்த தீ மளமளவென்று பரவி அருகில் உள்ள பல நாட்களாக பயன்பாடில்லாத கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு பரவியது. இதில் அந்த கட்டிடத்திலில் உள்ள மர ஜன்னல்கள், மரகதவுகள் அனைத்திலும் தீ பற்றி எரிந்தது. தீ விபத்து குறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் அருப்புக்கோட்டை
தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயபாண்டி அவர்களின் தலைமையில் வீரர்கள் தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்து குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் அவர்கள் நடத்திய விசாரணையில் அந்த கட்டிடம் நெசவாளர் காலனியை சேர்ந்த கனேசன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் பல நாட்களாக பயன்பாடு இல்லாமல் மூடி இருந்ததும் தெரிய வந்தது. தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையினால் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் வந்து பெரிய தீ விபத்து தடுக்கப்பட்டது.