
மதுரை செல்லூர் பகுதியில் மது பாட்டில்கள் சட்ட விரோதமாக ஆட்டோவில் வைத்து விற்பனை, செல்லூர் போலீசார் நடவடிக்கை
மதுரை மாநகர்,செல்லூர், D2, காவல்நிலையத்தின் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் பணியில் இருக்கும் போது அவரது ரகசிய தகவலாளி நிலையம் வந்து, செல்லூர், குலமங்கலம் மெயின் ரோடு, அய்யனார் கோவில் அருகில் ஆட்டோவில் வைத்து சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக கூறிய தகவலை, ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்களுக்கு தெரிவித்து, அவரின் அனுமதி பெற்று காலை 7 மணியளவில் தானும் தன்னுடன், தலைமை காவலர் செந்தில்பாண்டியன், முதல் நிலை காவலர் ராஜேஸ் ஆகியோருடன் ரோந்து பணியில் ஈடுபடும்போது, சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு காவலர்களை கண்டவுடன் வாடிக்கையாளர்கள் ஓடிவிட்டனர், அதன்பின் ஆட்டோவிலிருந்தவரை பிடித்து விசாரித்த போது அவர் செல்லூரை சேர்ந்த பாண்டி மகன் தெய்வம் வயது 35/21 என தெரியவந்தது. ஆட்டோவில் விற்பனைக்காக வைத்திருந்த 15 மது பாட்டில்களும், விற்பனை செய்து வைத்திருந்த ரூபாய் 4900 மும், விற்பனைக்கு பயன்படுத்தி ஆட்டோவையும் பறிமுதல் செய்து நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர், அதன் பின் தக்க பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
