விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டை:-
சமீபத்திய நிகழ்வுகள் பெண்களை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல வகை நடவடிக்கைகளை எடுத்து செயலாற்றி வருகின்றன.
அதை செயல் முறைபடுத்தி பொதுமக்கள் மத்தியில் சிறப்புற கொண்டு சேர்ப்பது காவல் துறையே என்றால் மிகையாகாது.
அதன் பணியாக
பெண்களின் பாதுகாப்பிற்காக அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பெண்காவலர்கள் நகரில் பொதுமக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள், என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர்.
அத்துடன் தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளுக்கு மத்தியில் பெண்களுக்கான பிரத்யேகமாக 24மணிநேரம் இயங்கும் தொலைபேசி எண்கள் குறித்து விளக்கி கூறினார்கள்.
எப்போதும் பொதுமக்களையும், பொதுமக்களின் நலனை பற்றிய சிந்தனையில் பணியாற்றுவதால்
காப்பது கடவுள்தான் என்றாலும் காவல் துறையில் காவலர்களும் பொதுமக்கள் மத்தியில் நடமாடும் கடவுள்தான் என்பதில் கடுகளவிலும் ஐயமில்லை.
