பக்தர்கள் தரிசனத்திற்கு தடை, பூஜைகள் வழக்கம் போல் கோவில் பணியாளர்களால் நடைபெரும்
மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக ஆடித்திருவிழாவை முன்னிட்டு கீழ் காணும் திருகோவில்களில் ஆகஸ்ட்டு 2 முதல் 8 ம் தேதி வரை பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. என அரசால் அறிவிக்கப்படுகிறது. மேலும் வழக்கமான பூஜைகள் மட்டும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறும்.
அருள்மிகு திரு.மீனாட்சியம்மன் திருகோவில், மதுரை.
அருள்மிகு. திருப்பரங்குன்றம் முருகன் கோவில், திருப்பரங்குன்றம்.
அருள்மிகு சுந்தராஜு பெருமாள் திருக்கோவில்,மற்றும் பழமுதிர் சோலை முருகன் கோவில், அழகர் கோவில், மதுரை.
அருள்மிகு சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்க திரு கோவில்,
வண்டியூர் மாரியம்மன் திருகோவில்,மதுரை
திருவாப்புடையார் திருக்கோவில், செல்லூர்,
முக்தீஸ்வரர் திருக்கோவில், தெப்பக்குளம்
ஆதி சொக்கநாதர் திருக்கோவில், சிம்மக்கல்
கூடலழகர் பெருமாள் திருக்கோவில்
பாண்டி முனீஸ்வரர் திருக்கோவில்,
ஜெனகை மாரியம்மன் திருக்கோவில், சோழவந்தான்,
வீரகாளியம்மன் திருக்கோவில், ஜெய்ஹிந்துபுரம்,
ஏடகநாததிருக்காவில்,திருவேடகம்
சாஸ்தா அய்யனார் திருக்கோவில், தனிச்சியம்.
சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கோவில், குருவித்துறை,
தண்டாயுதபானி திருக்கோவில், நேதாஜி ரோடு,
திருமறைநாதர் திருக்கோவில், மேலூர்
நரசிங்கப்பெருமாள் திருக்கோவில், ஒத்தக்கடை,
காளமேகப்பெருமாள் திருக்கோவில் திருமோவூர்.
மதனகோபால ஸ்வாமி திருக்கோவில்
பிரசன்ன வெங்கடேஷப்பெருமாள் திருக்கோவில், தல்லாகுளம்.
இன்மையில் நன்மை தருவார் திருக்கோவில், மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெளி வீதிகள், மாசி வீதிகள், சித்திரை வீதிகள், கோரிப்பாளையம், அரசரடி, காளவாசல், பைபாஸ் ரோடு காமராஜர் சாலை ஆகிய இடங்களில் எதிர் வரும் திருவிழா நாட்களில் ஜவுளிக்கடைகள் பேரங்காடிகள்,மற்றும் இதர வணிக நிறுவனங்களில் மக்கள் அதிகம் கூட வாய்புள்ளது. எனவே அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை கண்டிப்பாக அனுமதிக்ககூடாது. மேற்படி நிலையான நெறிமுறைகளை கடைபிடிக்காத வணிக நிறுவனங்கள் மீது அரசு பேரிடர் மேலான்மை சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
