ஜாமீனில் வெளி வந்த குற்றவாளியின் நகை திருட்டு, ஆய்வாளரின் அதிரடி நடவடிக்கையால் மீட்பு
மதுரை மாநகர், சுப்பிரமணியபுரம் C2, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ராமலிங்கநகர் 3 வது தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜோதிபாசு மகன் ஸ்டாலின் வயது 32/2020, இவர் மேலூர் வைகை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இவர் கடந்த மாதம் 28 ம் தேதி, இவரது மனவி தனது தாயார் வீட்டிற்கு தன் குழந்தைகளுடன் சென்று விட்டதால், இவரும் தனது வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தையார் வீட்டிற்கு சென்று விட்டார், இந்த நிலையில் மறுநாள் 29 ம் தேதி வீட்டின் உரிமையாளரின் மகள் மோட்டார் போட சென்ற போது ஸ்டாலின் அவர்களின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த திடுக்கிட்டார், உடனே ஸ்டாலினுக்கு தகவல் தெரித்தார், தகவலறிந்த ஸ்டாலின் அவர்கள் நேராகா சென்று பார்த்த போது வீட்டின் இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டும், தலைவாசல் மரக் கதவு உடைக்கப்பட்டும் வீட்டின் உள்ளே கப்போர்டில் இருந்த பீரோ சாவியை கொண்டு பீரோவை திறந்து உள்ளே பீரோவில் இருந்த சுமார் ஏழேகால் பவுன் தங்க நகைகள் மற்றும் 2 வெள்ளி விளக்குகள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்தது .
இது குறித்து நடவடிக்கை எடுத்து, திருடு போன பொருட்களை மீட்டுத்தறும்படி சுப்பிரமணியபுரம் C2, காவல் நிலையம் குற்றப்பிவு ஆய்வாளர் திருமதி பிரியா அவர்களிம் புகார் அளித்தார்,
ஆய்வாளர் திருமதி. பிரியா அவர்களின் உத்தரவுப்படி சார்பு ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தீவிர புலன்விசாரணை செய்து வந்தநிலையில் சுப்பிரமணியபுரம் C2, காவல் நிலைய குற்ற வழக்குகள் Gr.No.116
Gr.No.134, Gr.No149, ஆகிய வழக்குகளில் தொடர்புடைய ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்த நாச்சியப்பன் மகன் கனேசன் வயது 20/22020, என தெரிய வந்தது, இவர் இந்த மாதம் 25 ம் தேதியன்று மதுரை மத்திய சிறையிலிருந்து பிணையில் வெளியில் வந்தவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என சாட்சியங்களின் அடிப்படையிலும், புலன் விசாரணையின் மூலமாகவும் தெரிய வந்தது, மேலும் இவரை விசாரணை செய்து இந்த மாதம் 10 ம் தேதி கைது செய்து திருடு போன பொருட்களை காவல் துறையினர் மீட்டனர்,