
பொதுமக்களிடையே கணினி குற்றங்கள் சம்மந்தமாக விழிப்புணர்வு
ஏற்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு காவல்துறையில் இயங்கி வரும் 46 கணினி குற்ற (சைபர் கிரைம்) தடுப்பு காவல் நிலையங்களில் 24 காவல் நிலையங்களுக்கிடையே நடைபெற்ற விழிப்புணர்வு காணொளி போட்டியில் சிறந்த காணொளியாக முதல் பரிசு ரூ.50,000/- நாமக்கல் மாவட்டத்திற்கு¸ இரண்டாம் பரிசு ரூ.30,000/– விருதுநகர் மாவட்டத்திற்கு¸ மூன்றாம் பரிசு ரூ.20,000/- சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும் மற்றும் ஆறுதல் பரிசு ரூ.5,000/- மீதம் உள்ள அனைவருக்கும் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் பரிசுத் தொகையினை வழங்கி ஊக்குவித்தார்கள்.
கணினி குற்றங்கள் புகார் எண் : 155260
