Police Department News

மதுரையில், மனைவி தன்னுடன் சேர்ந்து வாழாததால், மாமனாரை வெட்டிய மருமகன்

மதுரையில், மனைவி தன்னுடன் சேர்ந்து வாழாததால், மாமனாரை வெட்டிய மருமகன்

மதுரை, கருப்பாயூரணி, நூல்பட்டரை தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராஜபாண்டி வயது 47/21, இவர் மதுரை காமராஜர் சாலையில் உள்ள செளராஷ்ரா பள்ளியில் ஸ்வீப்பராக வேலை பாரத்து வருகிறார், இவரது மனைவி அழகுநாச்சியார், இவர்களது மகள் வளர்மதியை கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் மேலக்கோட்டையை சேர்ந்த, மகேந்திரன் மகன் முத்துமணி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார், முத்துமணி குடி பழக்கம் உள்ளவர் இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவிக்கு தொல்லை கொடுத்து வந்த காரணத்தால் தன் கணவனை பிரிந்து தன் தந்தை வீட்டில் வசித்து வந்தார் இவர் B.Com., வரை படித்திருந்ததால் இவருக்கு அரசு வேலை கிடைத்து நிம்மதியாக வாழ்ந்து வந்தார், கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, மனைவி வளர்மதி நிம்மதியாக வாழ்வது பொருக்காமல் முத்துமணி அடிக்கடி தன் மாமனாரை சந்தித்து உன்னால்தானே என் வாழ்கை இப்படி ஆனது எனக்கு 3 லட்சம் ரூபாய் கொடு இல்லையேல் உன்னையும் உன் மகளையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வந்துள்ளார், இந்த நிலையில் கடந்த 2 ம் தேதி, காலை 11.15 மணியளவில் தான் வேலை செய்யும் பள்ளியில் வேலையை முடித்து விட்டு காமராஜர் சாலை வழியாக வந்து கொண்டிருக்கும் போது தனது மருமகன், அவனது நண்பன் விக்னேஸ்வரனுடன் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்தனர். வந்தவர்கள் உன்னால்தானே என் வாழ்கை இப்படி ஆகி விட்டது என கூறிக் கொண்டே தங்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் மாறி மாறி வெட்ட ஆரம்பித்தனர் இதனால் படுகாயமடைந்த ராஜபாண்டியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை மேற்கொண்டார். அதன் பின் தகவல் அறிந்த மதுரை தெப்பகுளம் B3, காவல்நிலைய ஆய்வாளர் திரு. தமிழ்செல்வன் அவர்களின் உத்தரவின்படி, சார்பு ஆய்வளர் திரு,சுந்தரபாண்டியன் அவர்கள் மருத்துவ மனை வந்து புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி முத்துமணி, விக்னேஷ்வரன் ஆகியோரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.