
மதுரை திருநகர் பகுதியில் பணம் வைத்து சீட்டாடியவர்கள் கைது, திருநகர் போலீசார் நடவடிக்கை
மதுரை, திருநகர் W1, காவல்நிலைய காவல் ஆய்வாளர் திருமதி அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு கனேசன் அவர்கள் சக காவலர்களுடன் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக 16/08/21 பகல் சுமார் 4 மணியளவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது விளாசேரி கண்மாய் அருகே சிலர் வட்டமாக அமர்ந்து ஜெயிக்குது, தோக்குது என பணம் வைத்து வெட்டுச்சீட்டு விளையாடிக்கொண்டிருந்தனர், அவர்களை கைது செய்து விசாரித்த போது அவர்கள் நாகராஜன் வயது 39/21, குருசாமி வயது 60/21, தர்மராஜ் வயது 52/21, விஜய்காந்த் வயது 37/21, மாயாண்டி வயது 33/21, பூமிநாதன் வயது 50/21, சுரேஷ் 39/21, என தெரிய வந்தது, உடனே அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்த ரூபாய் 180/− மற்றும் 52 சீட்டுகள் அடங்கிய 3 சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி அவர்களை நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர், அதன் பின் அவர்களை ஜாமினில் விடுவித்தனர்.
