
ஓராண்டிற்கு நன்னடத்தை ஆணையை மீறி கொலை வழக்கில் ஈடுபட்டதால் ரவுடிக்கு 329 நாட்கள் சிறை
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க சிவகாஞ்சி காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட முகேஷ் ( எ ) சுபாஷ் வயது 26 த/பெ லட்சுமி நரசிம்மன், பல்லவர்மேடு மேற்கு பகுதி, காஞ்சிபுரம் என்பவரை 110 குவிமுச வின்படி நன்னடத்தையில் இருக்கும்படி காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மூலமாக 23.07.2021 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்படி, முகேஷ் 25.07.21 அன்று தனது கூட்டாளிகளுடன் பல்லவர்மேட்டைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்தது சம்மந்தமாக சிவகாஞ்சி காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். எனவே, இவர் நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக 329 நாட்கள் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.
