மதுரை, உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற இருவர் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்போருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 30/07/21 ம் தேதி உசிலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்த பாக்கியராஜ் வயது 36, த/பெ. சந்திரன், வெள்ளைமலைப்பட்டி, உசிலம்பட்டி தாலுகா, மதுரை, இளங்கோ என்ற இளங்கோவன் வயது 32/21, த/பெ.யோசனாய், வெள்ளைமலைப்பட்டி, உசிலம்பட்டி தாலுகா, மதுரை, ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் குற்ற எண். 359/2021 u/s.8(c) r/w.20(b)(ii)(c)25,NDPS act படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதி மன்றக் காவலில் உள்ளார்கள். இவர்களை குண்டர் தடுப்பு காவலில் வைக்க மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்களின் பரிந்துரையின் பேரில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. அனில்சேகர் அவர்கள் மேற்படி இருவரையும் தடுப்பு காவலில் வைக்க ஆணை பிறப்பித்துள்ளார்கள்.
மேலும் மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வோர் பதுக்குவோர், கடத்துவோர் ஆகியோர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V..பாஸ்கரன் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
