Police Department News

சென்னையில் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு.காவல் ஆணையர் சங்கர் ஜிவால், IPS

சென்னையில் வீடு வாடகைக்கு விடும் அதிரடி உத்தரவு.காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,IPS

சென்னையில் சொந்த வீடு வைத்துள்ளவர்கள் தங்கள் வீடுகளில் வசிக்கும் வாடகைதாரர்களின் விவரத்தை அக்டோபர் 26-ம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்களோடு போடும் ஒப்பந்தம் பற்றி எதுவும் போலீசுக்கு தெரிவிக்க தேவையில்லை . வாடகை தாரர்கள் பற்றிய தகவல்கள் காவல் நிலையங்களில் ரகசியமாக வைக்கப்படும்.

இந்த விவரங்கள் காவல் நிலையங்களில் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். அந்தந்த பகுதி துணை கமிஷனர்கள் அலுவலகங்களிலும், கமிஷனர் அலுவலகத்தில் உளவுப்பிரிவிலோ அல்லது குற்ற ஆவண காப்பகத்திலோ இந்த விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைப்பார்கள். வெளிமாநிலங்களிலோ அல்லது வெளிநாடுகளில் இருந்து வாடகைக்கு வருபவர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், வீட்டு உரிமையாளர்கள், தங்களது வீட்டில் வாடகைக்கு குடியிருப்போரின் விவரங்களை காவல் நிலையங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின்படி தான் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தற்போது மீண்டும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.