மதுரை, மேல அனுப்பானடி பகுதியில் வீட்டில் வாலிபர் அடித்து கொலை
மதுரை கே.புதூர், லூர்து நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் கருப்பையா வயது 60/21, இவர் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார், இவரது உறவினர் பாண்டித்துரை, என்பவர் மதுரை, தெப்பக்குளம் B3, குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மேல அனுப்பானடியில் ஒரு பிளாட் வீடு உள்ளது. மேற்படி வீட்டின் மாடியில் உள்ள ஒரு வீட்டில் கருப்பசாமி அவர்களின் கொழுந்தியா மகன் மகேஸ்வரன் வயது 23/21, த/பெ. கலைஞர்நிதி, ஆப்பனூர் கிராமம், கடலாடி தாலுகா, ராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்தவரும், மற்றும் திருச்சுழி தாலுகா நந்தகுளக்கிராமத்தைச் சேர்ந்த அஜீத் என்பவருக்கும் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். . இந்த நிலையில் கடந்த 4 ம் தேதியன்று காலை சுமார் 9 மணிக்கு அந்த காம்பவுண்டில் குடியிருக்கும் பெண் ஒருவர் தகவல் தெரிவித்ததன் பேரில் வீட்டு ஓனர் பாண்டித்துரை அவர்கள் சம்பவ இடத்திற்கு நேராக வந்து பார்த போது மகேஸ்வரன் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார் மற்றும் ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் மகன் மாரீஸ்வரன் நெற்றியில் வீக்கத்துடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார் உடனே 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றுள்ளனர் அதன் பின் கருப்பசாமி அவர்கள் நடந்த சம்பவத்தை B.4, காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, காவல் துணை ஆணையர் திரு.தங்கத்துரை, உதவி ஆணையர் திரு. சண்முகம், கீரைத்துறை காவல்நிலைய ஆய்வாளர் திரு. பெத்துராஜ் அவர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர் அதில் அஜீத்பாண்டி மனைவியை மகேஸ்வரன் காதலித்ததாக 20 நாட்களுக்கு முன்பு இருவருக்கு தகராறு ஏற்பட்டு அஜீத் வீட்டை விட்டு போய் விட்டதாக தெரிய வந்தது. அதன் பின் கடந்த 3 ம் தேதி இரவு 11.30, மணிக்கு மேற்படி அஜீத்பாண்டி, மாரீஸ்வரன், மற்றும் கீரைத்துரை ஓடக்கரையை சேர்ந்த இருளாண்டி மகன் சேதுபதி ஆகியோர் மகேஸ்வரன் ரூமில் ஒன்றாக இருந்ததாகவும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கொலை நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது, அதன் பின் தப்பியோடிய எதிரியான, அஜீத்பாண்டியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.