மதுரை, மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்பனை, இரண்டு சிறுவர்கள் உட்பட மூவர் கைது, இருவர் தப்பியோட்டம்
மதுரை மாநகர், மதிச்சியம் E 2, சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியான மதுரை வைகையாறு வடகறை பகுதியில் ஓபுளா படித்துறை சந்திப்பில், கடந்த 15ம் தேதி மதியம் 12.15 மணிக்கு E2, காவல்நிலைய சார்புஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்கள் மற்றும் தலைமை காவலர் திரு. செல்வராஜ்,832, தலைமை காவலர் திரு. கனேசன்,2317, தலைமைகாவலர் திரு. பிரேம்குமார்,3569, ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கே காவலர்களை பார்த்ததும் தப்பியோட முயற்ச்சித்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் மதிச்சியத்தை சேர்ந்த முருகன் மகன் மார்கண்டபூபதி வயது 22/21, என தெரிய வந்தது, அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை அழைத்து கொண்டு வைகை வடகறை, கருப்பட்டி மண்டபம் அருகில் செல்லும் போது அங்கே வேவு பார்க்க நின்று கொண்டிருந்த கார்த்திக், செல்வகணபதி ஆகியோர் தப்பியோடி விட்டனர், அதன் பின் உள்ளே சென்று பார்த்ததில் அங்கே இருந்த இரு சிறார்கள் மதுரை ஆள்வார்புரம் பகுதியை சேர்ந்த காமாக்ஷி மகன் அலெக்ஸ்பாண்டியன்,வயது,17/21, அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் ஜெயமுருகன் வயது 17/21, ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் அங்கு உள்ள உரச்சாக்குபையில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது, கஞ்சாவை கைப்பற்றி மூவரையும் கைது செய்தனர் மற்றும் தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள்.
