
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் சர்வதேச மகளிர் தினம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி மற்றும் மகளிர் உதவி எண்.181 ஆகியவற்றின் விழிப்புணர்வு குறித்து பெண்களுக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது
08.03.2025-ந்தேதி காலை சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல் உதவி செயலி மற்றும் மகளிர் உதவி எண்.181 பற்றிய விழிப்புணர்வு குறித்து பெண்களுக்கான மினி மாரத்தான் ஓட்ட பந்தயம் நடைபெற்றது.
இம்மினி மாரத்தான் ஒட்டத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் TVS டோல்கேட்-ல் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இம்மினி மாரத்தான் ஓட்டமானது TVS டோல்கேட்-ல் துவங்கி, தலைமை தபால் நிலையம், முத்தரையர் சிலை, கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல்நிலையம், MGR சிலை ரவுண்டானா வழியாக, Students Road-ல் முடிவுற்றது.
மேலும் இவ்விழாவில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பேசுகையில், இந்த மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு மகளிர் உதவி எண்.181 என்ற எண் உள்ளது என்றும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தங்களுக்கு உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் இந்த உதவி எண்ணை பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த ஓட்டத்தின் நோக்கம் என்றும், இந்த ஓட்டத்தில் பங்கு பெற்றுள்ள அனைவரும் இந்த மகளிர் உதவி எண்.181-யை அனைத்து பெண்கள், குழந்தைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என கூறி அறிவுறுத்தி அனைவருக்கும் மகளிர்தின நல்வாழ்த்துக்களை கூறினார்கள்.
இம் மினி மாரத்தான் ஓட்டத்தில் மாநகர காவல்துறையில் பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள், ஆளினர்கள், பெண் அரசு ஊழியர்கள், பெண் ஊர்காவல் படையினர் மற்றும் ஹோலிகிராஸ், பிஷப்ஹீபர், EVR கல்லூரி, காவேரி மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் உட்பட அணைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் என சுமார் 500 பெண்கள் கலந்து கொண்டனர்.

