
மதுரை வந்த திருச்சி சிறை வார்டன் மயங்கி விழுந்து பலி
மதுரை மத்திய சிறையில் திருச்சி ஜெயில் வார்டன் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் வயது 38 இவர் கடந்த 2006-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஜெயில் வார்டனாக வேலை பார்த்து வந்தார்.
மதுரை மத்திய சிறைச் சாலையில் அதிகாரிகள்- ஊழியர் மட்டத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்து வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக சரவணன் நேற்று வந்திருந்தார். இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை மீட்டு மதுரை சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார்.
