Police Department News

சட்டவிரோதாமாக செயல்படும் மகளிர் தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை! சென்னை ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ்

சட்டவிரோதாமாக செயல்படும் மகளிர் தங்கும் விடுதிகளுக்கு எச்சரிக்கை! சென்னை ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ்

சென்னையில் உரிமம் இல்லாமல் நடத்தி வரும் நூற்றுக்கணக்கான தனியார் மகளிர் தங்கும் விடுதிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ் அவர்கள் எச்சரிக்கை !

சமீபகாலமாக சென்னையில் புற்றீசல் போல தனியார் மகளிர் தங்கும் விடுதிகள் என்ற பெயர்ப் பலகை காணப்படுகிறது.
இதுவரை சென்னையில் 26 மகளிர் தங்கும் விடுதிகள் மட்டுமே உரிமம் பெற்று நடத்தி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தங்கும்விடுதிகள் நடத்துவதற்கு அரசாங்கத்தில் பல விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ள நிலையில் நூற்றுக் கணக்கான தனியார் மகளிர் விடுதிகள் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக செயல்படுவதாக பல புகார்கள் மாவட்ட ஆட்சியாளருக்கு வந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள மகளிர் தங்கும் தனியார் விடுதிகள் அனைத்தும் சட்டப்படி உரிமம் பெற்று அதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக நடத்தும் மகளிர் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் மகளிர் தங்கும் விடுதிகள் நடத்த உரிமம் பெறாதவர்கள் தற்போது உடனடியாக உரிமம் பெற்றுக் கொள்ள துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் சென்னை மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விடுதிகளை நடத்த அதன் உரிமையாளர்கள் நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகளிர் தங்கும் விடுதிகள் நடத்த அரசுநிபந்தனைகள்.

1.விடுதியின் உரிமம் பெற தீயணைப்பு சான்றிதழ்

2.சுகாதாரத் துறை சான்றிதழ்

கட்டிட உறுதித்தன்மை சான்று மற்றும்

Form D உரிமம் ஆகியவை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

5.அரசு அங்கீகரிக்கப்பட்ட கட்டிடத்தில் மட்டுமே விடுதி நடத்தப்பட வேண்டும்.

விடுதியில் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும். (குளியலறை மற்றும் உடைமாற்றும் அறைகள் தவிர )

7.விடுதி காப்பாளர் கட்டாயம் பெண்ணாக இருக்க வேண்டும்.

8.விடுதி பாதுகாவலர் விடுதியில் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கலாம்.

விடுதி பாதுகாவலராக இருப்பவர்கள் காவல்துறையில் நன்னடத்தை சான்றிதழ் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

10.விடுதியில் சேர்க்கை பதிவேடு நடமாடும் பதிவேடு விடுப்பு மற்றும் விடுமுறை பதிவேடு மற்றும் பார்வையாளர் பதிவேடு ஆகியவை கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.

11.ஒருவர் தங்குவதற்கு சராசரியாக 120 சதுர அடி இருக்கும்படி ஒதுக்கி அதை விடுதி மேலாளர் உறுதி செய்ய வேண்டும்.

12 குடும்பமாக வசிப்பதற்கு என்று உள்ள தனி வீடுகளை வாடகைக்கு எடுத்து எந்த உரிமம் பெறாமல் வாடகைக்கு எடுத்து மகளிர் தங்கும் விடுதியாக மாற்றி போதிய வசதி இல்லாமல் விடுதி செயல்படுவதை கண்டறிந்து விடுதி நடத்தும் உரிமையாளர் மீது மற்றும் கட்டிட உரிமையாளர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியாளர் விஜயராணி ஐஏஎஸ் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நீதி மன்ற உத்தரவு!
மகளிர் விடுதி பதிவு விவகாரம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பல்வேறு துறை அதிகாரிகளிடம் பதிவு, உரிம சான்று பெற வேண்டி இருப்பதால் விடுதிகளை பதிவு செய்ய 6 மாத அவகாசம் வேண்டும் என்கிறது சென்னை பெண்கள் விடுதி உரிமையாளர் நலச் சங்கம்.
மகளிர் தங்கும் விடுதிகளின் விவரங்களை பதிவு செய்ய 6 மாத அவகாசம் கோரி விடுதி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் மகளிர் தங்கும் விடுதி ஒன்றில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டடிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மகளிர் தங்கும் விடுதி பதிவு தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் கடும் கட்டுப்பாடுகளை விதித்தார்

இதன்படி, பெண்கள் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் விடுதி தொடர்பான விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் வழங்கி, தங்கள் விடுதியினை பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தார். மேலும் பதிவுச்சான்று உரிமம் இல்லாமல் விடுதி நடத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இதன் காரணமாக காவல்துறை, சமூக நலத்துறை, தீயணைப்புத் துறை, வருவாய் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பதிவு, உரிம சான்று பெற வேண்டி இருப்பதால் பெண்கள் தங்கும் விடுதிகளை பதிவு செய்ய 6 மாத அவகாசம் வழங்க வேண்டும் என சென்னை பெண்கள் விடுதி உரிமையாளர் நலச் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்திய நாரயாணன் முன் விசாரனைக்கு வந்தது. அப்போது, விடுதி உரிமையாளர்களுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் விடுதி உரிமையாளர் நலச் சங்கத்தின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து 2 வாரத்தில் உத்தரவு பிறக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.