மது பானக்கடையில் மது அருந்தி விட்டு பணம் தராமல் தகராறு
தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தென்காசி யானை பாலம் மேல்புறம் உள்ள அரசு மதுபான கடை எண் 10707 ல் மதுபான கடையுடன் கூடிய அரசு பாரில் நேற்று 12.10.2023 ம் தேதி மதியம் சுமார் 02.30 மணியளவில் மது அருந்தி விட்டு குடிபோதையில் பணம் கொடுக்காமல் மேலும் பிராந்தி கேட்டு பார் சப்ளையரிடம் தகராறு செய்தும் அசிங்கமாக பேசியும் அங்குள்ள மது பாட்டில்களை உடைத்தும் பிளாஸ்டிக் சேர்களை உடைத்தும் அங்கிருந்த பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்து அந்த இடத்தையே கலவர பூமியாக்கிய நன்னகரம் பாரதி நகரை சேர்ந்த முசாரியா மகன் செண்பகராஜ் என்ற பூ ராஜ் 45/2013 மற்றும் மேலகரம் ஸ்டேட் பாங்க் காலனி முதல் தெரு சுப்பிரமணியன் மகன் ராஜ் என்ற அந்தோணி ராஜ் 21/2023 மற்றும் தென்காசி மேலகரம் ஸ்டேட் பேங்க் காலனி முதல் தெருவை சேர்ந்த வினோத் என்ற முபாரக் 32/2023 ஆகியோரை தென்காசி காவல்துறை துரிதமாக கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது இதில் செண்பராஜ் என்ற பூராஜ் மீது சாம்பவர் வடகரை காவல் நிலையத்தில் இடைகால் டாஸ்மாக் சூப்பர்வைசரை கொடுரமாக வெட்டி கொன்ற கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் தென்காசி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.