செயினை பறிகொடுத்தவர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் முன்பே செயினை பறித்து சென்ற திருடனை கைது செய்த பலே போலீசார்
மதுரை, அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த செண்பகவல்லி என்ற பெண்ணிடம் செயினை வழிப்பறி செய்த கொள்ளையர்கள் மதுரை மதிச்சியம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது
அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த சார்பு ஆய்வாளர் திரு.நாகராஜன் மற்றும் காவலர்கள் மன்மதன் ராஜசேகர் ஆகியவர் நிற்பதை பார்த்து வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓடிய சபரி மற்றும் ஹரிஹரன் இருவரையும் காவலர்கள் விரட்டிச் சென்று கைது செய்துள்ளனர்
மேலும் அவரிடமிருந்து திருட்டு பைக் 8 சவரன் நகை செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளனர் இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க சென்ற போதுதான் செயினை பறி கொடுத்த சென்பகவள்ளி என்பவர் புகார் கொடுக்க காவல் நிலையம் வந்துள்ளார். ஆக புகார் வரும் முன்பாகவே திருடனை கைது செய்த காவலர்களை மதுரை காவல் ஆணையர்.அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார் மேலும் உதவி ஆணையர் திரு. சுரேஷ்குமார் அவர்கள் இவர்களை நேரில் அழைத்து பாராட்டி பொன்னாடை அணிவித்து கெளரவிதார்கள்
