தகராறை விசாரிக்க சென்ற தலைமை காவலருக்கு சரமாரி வெட்டு
இன்று 12.09.22 தேதி மாலை ஈரோடு கருங்கல்பாளையம் சுண்ணாம்பு ஓடை டாஸ்மாக் கடை யில் தகராறு நடப்பதாக போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்படி இடத்திற்கு தலைமை காவலர் 341 என்பவர் சென்று கடையில் இருந்த சேல்ஸ்மேனை என்ன நடந்தது என விசாரித்துக் கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அரிவாளால் தலைமைக் காவலரின் வலது முன்னங்கை வலது தோள்பட்டை மற்றும் வலது நெஞ்சில் ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டியுள்ளார் உடனே அங்கிருந்தவர்கள் காயம்பட்ட தலைமை காவலரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு மணியன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலைமைக் காவலர் தற்போது நன்றாக உள்ளார்.
.
