
பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்து அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் கொண்டாடப்பட்டது.
பொங்கலை முன்னிட்டு பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு பேரூராட்சி சார்பில் கோலப் போட்டி, பாட்டு போட்டி, நடன போட்டி, கயிறு இழுத்தல், பானை உடைத்தல், மியூசிக்கல் சேர் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்ற பொதுமக்கள் தூய்மை பணியாளர்களுக்கு பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.சிந்து. அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகள் மட்டுமின்றி போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த
100 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கேஸ் ஸ்டவ், குக்கர், தவா, சமையல் உபயோக பொருட்கள், மற்றும் அழகு சாதன பொருட்கள் என பல்வேறு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு இன்ஸ்பெக்டர் தவமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.எல்.வெங்கடாசலம், திமுக பொருளார் MMM முருகன், முன்னாள் பொருளாளர் சூடப்பட்டி சுப்ரமணி, ஒன்றிய குழு உறுப்பினர் முத்துசாமி, பாஜக மத்திய அரசு நலத்திட்ட மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா, பேரூராட்சி துணைத் தலைவர் இதயத்துல்லா, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
