Police Department News

முன்விரோதம் காரணமாக மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மருமகன் கைது

முன்விரோதம் காரணமாக மாமனாரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மருமகன் கைது

களக்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெடுவிளையை சேர்ந்த பொன்னுத்துரை வயது (80), என்பவரின் இரண்டாவது மகளை அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் வயது வயது (59), என்பவர் திருமணம் செய்துள்ளார். கிருஷ்ணன் தனது மனைவியின் அண்ணன் மனைவியான இசக்கியம்மாளை கடந்த இருபது வருடங்களுக்கு முன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் வெட்டினார். அப்போது பொன்னுத்துரை, கிருஷ்ணனின் இடது கால் தொடையில் வெட்டியதில் கிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அதனால் கிருஷ்ணன் காலை சற்று தாங்கி நடப்பார். இதனை மனதில் வைத்துக் கொண்டு கிருஷ்ணன் அடிக்கடி பொன்னுதுரையை முறைப்பதும், அவதூறாக பேசி கொண்டிருந்தார். இந்நிலையில் 14.09.2021 அன்று கிருஷ்ணன் அரிவாளுடன் பொன்னுத்துரையின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, படுத்துக் கொண்டு இருந்த பொன்னுதுரையை அவதூறாக பேசி உன்னால் தான் நான் நொண்டியாக நடக்கிறேன் எனக்கூறி அரிவாளால் கழுத்து மற்றும் கைகளில் வெட்டி உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். தகவலறிந்த பொன்னுதுரையின் மகன் நயினார் 108 ஆம்புலன்ஸ் மூலம் தந்தையை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேற்படி பொன்னுத்துரை சிகிச்சை பலனின்றி இன்று இறந்துவிட்டார். இதுகுறித்து நயினார் களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் களக்காடு காவல் ஆய்வாளர் திரு ஜோசப் ஜெட்சன் அவர்கள் விசாரணை மேற்கொண்டு பொன்னுதுரையை அரிவாளால் வெட்டி கொலை செய்த கிருஷ்ணனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.