
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது – 580 கிராம் கஞ்சா பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் கடந்த(14.09.2021) ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காயல்பட்டினம் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் பட்டு சுரேஷ் வயது 21 மற்றும் தூத்துக்குடி 1ம் கேட் பகுதியை சேர்ந்த அம்மாமுத்து மகன் கணேஷ் வயது 20 ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் மேற்படி 2 எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து 580 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
